உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 16 ஆயிரத்து 794 பேர் விண்ணப்பித்துள்ளனர்

Published On 2023-06-24 07:39 GMT   |   Update On 2023-06-24 07:39 GMT
  • நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தீவன பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வெள்ளிவிழா நேற்று நடந்தது.
  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு தூணை திறந்து வைத்தார்.

நாமக்கல்:

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தீவன பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வெள்ளிவிழா நேற்று நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு தூணை திறந்து வைத்தார்.

மேலும், 3 நாள் நடைபெறும் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 3 கால்நடை உணவுத்துறை சார்ந்த இதர மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன.

நடபாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 12-ந் தேதி இணைய வழியில் தொடங்கியது. வரும் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு மற்றும் கால்நடை உணவுத்துறை சார்ந்த படிப்பு கள் என மொத்தமாக 16,794 பேர் விண்ணப்பித்துள்ளனர். நடபாண்டில் புதிய மருத்துவ படிப்புகளோ, புதிய கல்லூரிகளோ தொடங்கப்படவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை கறிக்கோழிக்கு 1.5 லட்சம் டன், கோழி பண்ணைகளுக்கு 2 லட்சம் டன், கறவை மாடுகளுக்கு 2 லட்சம் டன் அடர் தீவனம் மாதந்தோறும் தேவைப்படுகிறது. எனவே விவசாயிகள் தீவனப் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News