உள்ளூர் செய்திகள்

வெண்ணை காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலித்த காட்சி.

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இந்த ஆண்டின் முதல் வெண்ணை காப்பு அலங்காரம்

Published On 2023-01-04 09:25 GMT   |   Update On 2023-01-04 09:25 GMT
நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நாமக்கல்:

நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கி ழமையன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இது தவிர கட்டளைதாரர்கள் மூலம் தினசரி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் வரை பனிக்காலத்தில் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டின் (2023) முதல் வெண்ணைக்காப்பு அலங்காரம் நேற்று நடந்தது.

120 கிலோ வெண்ணை கொண்டு, சுவாமியின் உடல் முழுவதும் பூசி, பல வண்ணங்களால் அலங்காரம் செய்தனர். 3 மணி நேரத்துக்கு மேலாக ஆஞ்சநேயருக்கு இந்த அலங்காரம் நடைபெற்றது. அலங்காரம் முடிந்த பின்னர் திரை விலக்கப்பட்டு சுவாமிக்குத் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வெண்ணெய் காப்பு அலங்காரம் புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜனவரி 8-ந்தேதி) தினந்தோறும் இரவு 7 மணிக்கு மேல் கட்டளைத்தாரர்களால் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News