உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.

நாச்சிக்குப்பம் கிராமத்தில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Published On 2022-11-23 15:24 IST   |   Update On 2022-11-23 15:24:00 IST
  • கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.
  • பன்னீர் தெளித்து ஆரத்தி எடுத்து நலங்கு வைத்து சிறப்பாக கொண்டாடினர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் ஊராட்சி ஒன்றிய சமுதாயக்கூடத்தில் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வட்டார மருத்துவர் சரவணன் அறிவுறுத்தினர். பின்னர் நிகழ்ச்சியில் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் சந்தனம் பூசி, பொட்டு வைத்து, கை வளையல் பூட்டி, மாலை அணிவித்து, பன்னீர் தெளித்து ஆரத்தி எடுத்து நலங்கு வைத்து சிறப்பாக கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணி பெண்கள் அனை வருக்கும் சீர்வரிசையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அனை வருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News