உள்ளூர் செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்

Published On 2023-07-24 16:10 IST   |   Update On 2023-07-24 16:10:00 IST
  • உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க முடியாத கட்சி ‘நாம் தமிழர் கட்சி என கூறியதாக கூறப்படுகிறது.
  • இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கும், தி.மு.க. நிர்வாகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மத்தூர்,

ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் புளியாண்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மனித உரிமைகளை மீறியதை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் மத்தூ ரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது சோனார அள்ளி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி மேகநாதன் (வயது 40) என்பவர் அங்கு வந்து உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க முடியாத கட்சி 'நாம் தமிழர் கட்சி என கூறியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கும், தி.மு.க. நிர்வாகிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் மேகநாதனை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர். இதையறிந்த மத்தூர் போலீசார் விரைந்து வந்து மேகநாதனை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க.வினர் மத்தூர் பஸ் நிலையத்தில் திரண்டர். அவர்கள் மேகநாதனை தாக்கியவர்கள் மீது கைது செய்ய கோரியும், நாம் தமிழர் கட்சியின் பொதுக்–கூட்டத்தை தொடர்ந்து நடந்தக்கூடாது எனவும் கூறி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடையே பேச்சு வார்த்தை நடத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுபபதாக உறுதியளித்தனர். இதையடுத்து தி.மு.க.வினர் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News