உள்ளூர் செய்திகள்
பட்டிபுலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாக இயக்குநர்
- ஆய்விற்கு பின்னர் குளத்தின் ஓரத்தில் மரங்களை நட்டு சென்றார்.
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் பணிகள் நிறைவடைந்தன.
மாமல்லபுரம்:
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரம் அடுத்துள்ளது பட்டிபுலம் ஊராட்சி. இது சாலவான்குப்பம் காலனி, இளந்தோப்பு, இடையன்குப்பம், சாலவான்குப்பம், புது நெம்மேலி, பட்டிபுலம் குப்பம் உள்ளிட்ட சிற்றூர்களை கொண்ட பெரிய ஊராட்சியாகும். இங்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 21-22 நிதியின் கீழ், 12.33 லட்சம் ரூபாய் செலவில் பட்டிபுலம் கிராம குளம் புனரமைத்தல் மற்றும் 2 லட்சம் செலவில் ஆலடியம்மன் கோயில் தெரு பேவர் பிளாக் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் நிறைவடைந்தது.
இப்பகுதியை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னையா இன்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். ஊராட்சி தலைவர் ல.வரலட்சுமி உடனிருந்தார். ஆய்விற்கு பின்னர் குளத்தின் ஓரத்தில் மரங்களை நட்டு சென்றார்.