உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிய போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.

வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்; போலீசார் அறிவுறுத்தல்

Published On 2023-09-30 09:16 GMT   |   Update On 2023-09-30 09:16 GMT
  • பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது.
  • பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

சீர்காழி:

சீர்காழி நகரில் கொள்ளிட முக்கூட்டு, பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி ,கடைவீதி கரிக்குளம் முக்கூட்டு, காமராஜர் வீதி , உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி நகரில் போக்குவரத்துக்கு இடையூராக நின்ற வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர். மேலும் பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது. இதே போல் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரை கனரக வாகனங்கள் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடைவீதியில் ஒரு வழி பாதையாக இருப்பதை முழுமையாக வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வலியுறுத்த ப்பட்டுள்ளது. இதுபோல் பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News