உள்ளூர் செய்திகள்

போலீசார் வாகன ஓட்டிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

பங்கில் பெட்ரோலில் மழைநீர் கலந்து வந்ததால் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்

Published On 2023-06-04 15:00 IST   |   Update On 2023-06-04 15:00:00 IST
  • இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • பங்க் நிர்வாகிகள் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறி அனைவரையும் சமாதான படுத்தினர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஒரமாகமருதாண்டப்பள்ளி பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் அமைந்து உள்ளது.

இந்த பங்கில் அந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவது வழக்கம்.இந்நிலையில் நேற்று இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய வாகன ஓட்டிகள் வாகனம் இயங்காமல் அவதிபட்டனர்.

இந்நிலையில் வாகனத்தை சோதனை செய்து பார்த்ததில் மழை நீர் பெட்ரோல் கிடங்கில் இறங்கி உள்ளது தெரிய வந்தது.

இதனால் பெட்ரோல் போட்டவர்களின் வாகனங்கள் இயங்காததால் பங்கை 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல் ஆய்வாளர் ரஜினி சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து பங்க் நிர்வாகிகள் நஷ்ட ஈடு வழங்குவதாக கூறி அனைவரையும் சமாதான படுத்தினர்.  

Tags:    

Similar News