உள்ளூர் செய்திகள்

மேற்கூரை இடிந்து ஆபத்தான நிலையில் காணப்படும் தொகுப்பு வீடு.

நத்தம்: இடிந்து விழும் நிலையில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளால் பொதுமக்கள் அச்சம்

Published On 2023-04-04 12:05 IST   |   Update On 2023-04-04 12:05:00 IST
  • சிறு குழந்தைகளுடன் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும்போதே மேற்கூரை பெயர்ந்து தலையிலும் உடலிலும் விழுவதால் காயங்கள் ஏற்பட்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
  • தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து ஆதிதிராவிடர் மக்களுக்கு புதிய வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் ஊராட்சி அரவக்குறிச்சியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசால் கட்டித் தரப்பட்ட ஆதிதி ராவிடர் குடியிருப்புகள் தற்போது மிகவும் பாழ் அடைந்த நிலையில் உள்ளது. இதில் வசிக்கும் மக்கள் கட்டிடங்கள் தினமும் ஒவ்வொரு பகுதியாக பெயர்ந்து விழுவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமான சூழ்நிலையிலேயே குடியிருந்து வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிறு சிறு குழந்தைகளுடன் இரவில் தூங்கிக் கொண்டிருக்கு ம்போதே மேற்கூரை பெயர்ந்து தலையிலும் உடலிலும் விழுவதால் அவ்வப்போது காயங்கள் ஏற்பட்டு மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது என வருத்தத்தோடு தெரிவித்தனர்.

கட்டி முடிக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை எந்தவித பராமரிப்பு பணிகளும் செய்யாமல் உள்ள இக்குடியிருப்புகளில் வாழும் மக்கள் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு முறை அதிகாரிகளிடம் இந்த வீடுகளின் அவல நிலை குறித்து பலமுறை புகார் கொடுத்தனர். அவ்வப்போது வெறுமனே அதிகாரிகள் வந்து புகைப்படம் மட்டுமே எடுத்துச் செல்கின்றனர். இந்த வீடுகளை மராமத்து பணி செய்வதற்கு எந்த அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்த பாடில்லை.

இந்நிலை தொடர்ந்தால் இந்த குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இன்றி போய்விடும். எனவே தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து இங்கு வாழும் ஆதிதிராவிடர் மக்களுக்கு புதிய வீடு கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News