உள்ளூர் செய்திகள்

400 இடங்களில் வென்று மோடி மீண்டும் பிரதமராவார்-எல்.முருகன்

Published On 2024-06-01 10:16 IST   |   Update On 2024-06-01 10:16:00 IST
  • மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்பார்.
  • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்.

தூத்துக்குடி:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் குடும்பத்துடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கான ஆதரவு அலை வீசுகிறது. நாட்டில் நடை பெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்பார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும். விவேகானந்தர் தியானம் செய்த குமரி முனையில் பிரதமர் தியானம் செய்து கொண்டிருக்கிறார்.

மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் ஓடையை சுத்திகரிப்பது குறித்து காங்கிரஸ் கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பிய வாலி பரை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். அந்த சம்பவத்திற்கு தமிழக காவல் துறையினர் 2 நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாறாக கேள்வி கேட்ட இளைஞர் மீதும், தாய் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

சமூகவலைதளத்தில் ஏதாவது தகவல் வெளியிட்டால் அதிகாலை 2 மணிக்கு கைது செய்யும் காவல்துறை இந்த சம்பவத்தில் இன்னும் கைது செய்யாமல் உள்ளனர்.

2014-ம் ஆண்டு 10-வது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். 2027-க்குள் 3-வது இடத்தை அடைந்து விடுவோம் என பிரதமர் மோடி கேரண்டி கொடுத்துள்ளார். அதனை நாம் நிச்சயம் அடைவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News