உள்ளூர் செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சையில் மாதிரி வாக்குப்பதிவு

Published On 2023-08-10 16:04 IST   |   Update On 2023-08-10 16:04:00 IST
  • கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.
  • பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறியாளா்களால் மேற்கொள்ளப்பட்ட இப்பணி தற்போது முடிவடைந்துள்ளது.

தஞ்சாவூர்:

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்ற தோ்தலுக்கு தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளுக்கான முதல்நிலை சரிபாா்ப்பு பணி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், கலெக்டருமான தீபக் ஜேக்கப் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டது.

பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறியாளா்களால் மேற்கொள்ளப்பட்ட இப்பணி தற்போது முடிவடைந்துள்ளது.

இதைத்தொடா்ந்து, முதல்நிலை சரிபாா்ப்பு பணியில் சரிபாா்க்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் 5 சதவீத மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News