உள்ளூர் செய்திகள்

மழை வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு.

வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை எம்.எல்.ஏ ஆய்வு

Published On 2022-11-13 08:56 GMT   |   Update On 2022-11-13 08:56 GMT
  • பல பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
  • மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்ற முன்னேற்பாடுகள்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

கடந்த ஆண்டு கனமழையின் போது நாகப்பட்டினம் நகரின் பல பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கடந்த ஓராண்டில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஆண்டு அதிக அளவு தண்னீர் தேங்கிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு இம்முறை அங்கு மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையை மக்கள் தொடர்பு கொண்டு, மழை வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1077, 04365 251992, 8438669800 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News