உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ. குறைகேட்ட போது எடுத்தப்படம். 

புதியம்புத்தூர் அருகே ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் குறித்து எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-06-17 07:37 GMT   |   Update On 2022-06-17 07:37 GMT
  • ரூ.15.60 லட்சத்தில் நடைபெறும் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தை பார்வையிட்டார்.
  • ஊதியம் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

புதியம்புத்தூர்:

புதியம்புத்தூர் மணியாச்சி அருகே உள்ள கீழப்பூவாணி கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை சண்முகையா எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை மேற்கொண்டு வரும் பணியாளர்களிடம் 100 நாள் வேலையும், அதற்கான ஊதியமும் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

இதுபோல் சிங்கத்தாக்குறிச்சி கிராமத்தில் நடக்கும் 100 நாள் திட்ட பணிகளையும் பார்வையிட்டு, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ.15.60 லட்சத்தில் நடைபெறும் பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிடத்தையும் பார்வை யிட்டார். அப்போது கருங்கு ளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கிய லீலா, செல்வி, பொறியாளர் சித்திரை சேகர், ஓவர்சியர் சீனிவாசன் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News