உள்ளூர் செய்திகள்

பணிகள் குறித்து மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கேட்டறிந்தார்.

விளாத்திகுளம் அருகே வளர்ச்சி திட்டப்பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2022-11-25 09:38 GMT   |   Update On 2022-11-25 09:38 GMT
  • விளாத்திகுளம் அருகேரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது.
  • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கினார்.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை, புதிய நியாய விலை கடை, கலையரங்கம் ஆகியவற்றுக்கான கட்டிட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சீதா லட்சுமி, வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News