முட்டம் அரசு பள்ளியை ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
அரசு பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு
- 13 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன.
- 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்படும் என்று உறுதி அளித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் ஒன்றியம் முட்டம் ஊராட்சியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால், மாணவர்கள் அங்குள்ள கலையரங்க மேடையிலும், மரத்தடியிலும் அமர்ந்து படித்து வருகின்றனர். வகுப்பறை இல்லாமல் கடும் வெயிலில் மாணவர்கள் அவதிப்படுவது அண்மையில் சமூக வலை தளங்களில் வெளியானது.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கூறியதாவது,
நாகையில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் இதுவரை 6 பள்ளிகளுக்கு இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
13 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசின் பொது நிதியின் கீழ் 7 பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
முட்டம் பள்ளியின் நிலையை ஏற்கெனவே நேரில் பார்வையிட்டு தெரிந்து கொண்டேன். 2023-24 ஆம் நிதி ஆண்டில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அங்கு 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்படும் என்று உறுதியளித்துள்ளேன். விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.