உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி


கலாச்சார அமைச்சக ஓவியப் போட்டியில் பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவி சிறப்பிடம்

Published On 2022-08-24 08:46 GMT   |   Update On 2022-08-24 08:46 GMT
  • இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் உலகப் புகைப்பட தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
  • இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவி ஜெஸ்னோ அலெக்ஸ் சிறப்பிடம் பெற்றுச் சாதனை படைத்தார்.

தென்காசி:

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் உலகப் புகைப்பட தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ஓவியப்போட்டி நடைபெற்றது.

'கேமரா லென்ஸ் மூலம் அறிவியல்' என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி, புஷ்பலதா மெட்ரிக், பத்மாதேவி வித்யாலயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவிகள் பங்கேற்றனர். இதில் இலஞ்சி பாரத் மாண்டிசோரி மாணவி ஜெஸ்னோ அலெக்ஸ் சிறப்பிடம் பெற்றுச் சாதனை படைத்தார்.

வி.ஜி.பி.ஜி.-கிரியேசன்ஸ் மற்றும் நெல்லை ஒளிப்பதிவாளர் புலனக் குழு இணைந்து நடத்திய இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் நெல்லை மேயர் சரவணன் கலந்து கொண்டு சான்றிதழ், பரிசு வழங்கிப் பாராட்டினார்.

சிறப்பிடம் பெற்ற மாணவி ஜெஸ்னோ அலெக்ஸை பாரத் கல்விக்குழுமத் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், இயக்கு நர் இராதாபிரியா ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News