உள்ளூர் செய்திகள்

தாம்பரத்தில் மாநில அளவிலான கபடி போட்டி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2023-05-06 14:00 IST   |   Update On 2023-05-06 14:00:00 IST
  • கபடி போட்டியை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
  • கபடி போட்டிகளின்போது உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தாம்பரம்:

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாம்பரம் மாநகர திமுக மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் கபடி போட்டி தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தலைமையில் மேற்கு தாம்பரம், டி.டி.கே.நகர் பகுதியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.

மண்டல குழு தலைவர் டி.காமராஜ் அனைவரையும் வரவேற்றார்.

கபடி போட்டியை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

முன்னதாக கபடி போட்டிகளின்போது உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தாம்பரம் மாநகர தி.மு.க. சார்பில் மாநில இளைஞர் அணி அறக்கட்டளைக்கு வளர்ச்சி நிதியாக 5 லட்சம் ரூபாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன், தலைமை தீர்மான குழு செயலாளர் மீ.அ.வைத்தியலிங்கம், கள்ளக்குறிச்சி எம்.பி கௌதம் சிகாமணி, எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி கமலக்கண்ணன், துணைமேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் எஸ்.இந்திரன், நியமனக்குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர் மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News