உள்ளூர் செய்திகள்
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கோலத்தை அமைச்சர் பார்வையிட்டார்
- மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது.
- மகளிர் சுய உதவிக்கள் மூலம் சதுரங்கம் குறித்து வரையப்பட்டிருந்த கோலங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார்.
செங்கல்பட்டு:
மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதையொட்டி செங்கல்பட்டில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்கள் மூலம் சதுரங்கம் குறித்து வரையப்பட்டிருந்த கோலங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார்.
ஆட்சியர் ராகுல் நாத், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த ரமேஷ், எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், நகரமன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.