உள்ளூர் செய்திகள்

அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், கீதாஜீவன் ஆகியோர் ஆய்வு செய்த காட்சி.


'அக்னிபத்' திட்டம்: நெருப்பில் நடக்கின்ற மாதிரியான சூழலை உருவாக்கி உள்ளனர்- அமைச்சர் செஞ்சி மஸ்தான் குற்றச்சாட்டு

Published On 2022-06-22 15:20 IST   |   Update On 2022-06-22 15:31:00 IST
  • விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடு கட்டி தரப்படவுள்ளது.
  • அக்னிபாத் திட்டம் என்பது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிலையை உருவாக்குவதாக சொல்லி, நெருப்பில் நடக்கின்ற மாதிரியான சூழலை உருவாக்கி உள்ளனர்.

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடு கட்டி தரப்படவுள்ளது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூக நலன், மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தாப்பாத்தி முகாமில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்‌.

பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் 106 இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிக்கக் கூடிய மக்களுக்கு புதியதாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை ரூ. 317 கோடியில் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி முகாமில் உள்ள மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம். அந்த விவசாயிகள் கருத்துக்கு முரண்பட்டதாக வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தனர். ஆண்டுக்கணக்கில் விவசாயிகள் ஒரே இடத்தில் தொடர்ந்து போராடினார்கள். பல விவசாயிகள் உயிர் நீத்தனர். அதன் பின்னர் தான் ஒன்றி அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது.

அக்னிபாத் திட்டம் என்பது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு நிலையை உருவாக்குவதாக சொல்லி, நெருப்பில் நடக்கின்ற மாதிரியான சூழலை உருவாக்கி உள்ளனர்.

இத்திட்டத்திற்கு எதிராக விவரமறிந்த இளைஞர்கள் போராடி வருகின்றனர்.விவரம் அறியாத இளைஞர்கள் போராடவில்லை.

மாணவர்கள் நினைத்தால் முடித்து காட்டுவார்கள் என்று தமிழகத்தில் ஏற்கனவே ஒரு வரலாறு படைத்தது இருக்கிறார்கள். அது இந்தியா அளவில் படைப்பதற்காக மாணவர்கள் மத்தியில் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News