உள்ளூர் செய்திகள்

நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா விடுதியை மீண்டும் நடத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

Published On 2023-03-29 13:29 IST   |   Update On 2023-03-29 13:29:00 IST
  • நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1.96 ஏக்கரில் தமிழ்நாடு ஓட்டல் 14 அறைகளுடன் உணவு விடுதியுடன் கடந்த 2000ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது.
  • தனியார் எடுத்து நடத்த இரண்டு முறை ஒப்பந்தப்புள்ளி கோரியும், யாரும் முன் வரவில்லை.

சென்னை:

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தில், நாமக்கல்லில் மலைக்கோட்டையில் செல்லப்பாதையில் எல்.இ.டி மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்றும், சாலையை சரிபடுத்த வேண்டும் எனவும், கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாத்துறையின் உணவு விடுதியுடன் கூடிய தங்கும் விடுதி அமைக்கப்படுமா? எனவும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் கூறியதாவது:-

எல்.இ.டி மின்விளக்கு அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பாதைக்கு செல்லும் சாலை வனத்துறை வசம் உள்ளது. அதற்காக வனத்துறையிடம் தடையில்லா சான்று கேட்கப்பட்டு உள்ளதாகவும், தலையில்லா சான்று கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1.96 ஏக்கரில் தமிழ்நாடு ஓட்டல் 14 அறைகளுடன் உணவு விடுதியுடன் கடந்த 2000ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது.

தேசிய நெடுஞ்சாலைக்காக சாலை அகலப்படுத்தப்பட்டபோது, சர்வீஸ் சாலையில் அமைந்து விட்டதால், பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததை தொடர்ந்து, 2004-2016 வரை செயல்படுத்தப்படாமல், பெண்கள் தையல் பள்ளிக்காக வாடகைக்கு விடப்பட்டது. இதை தொடர்ந்து, தனியார் எடுத்து நடத்த இரண்டு முறை ஒப்பந்தப்புள்ளி கோரியும், யாரும் முன் வரவில்லை. வருங்காலத்தில் மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News