உள்ளூர் செய்திகள்

அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த காட்சி.

தூத்துக்குடி 22-வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் குறைகள் கேட்ட அமைச்சர் கீதாஜீவன்

Published On 2023-04-04 09:03 GMT   |   Update On 2023-04-04 09:03 GMT
  • அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகள் கேட்டார்.
  • உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட பொன்னரகம் பகுதியில் உள்ள பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பின்னர் அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம் சில பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் குறைகேட்டார்.

பின்னர் அவர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக முறையாக நடைபெறாமல் இருந்துள்ளன. இனி அனைத்து பணிகளும் நல்ல முறையில் செய்து கொடுக்கப்படும். உங்கள் நலனில் அக்கறை உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், வட்ட செயலாளர் மனோ மரியதாசன், துணை செயலாளர்கள் பீரிடா லெட்சுமி, லிங்கராஜ், துரை, பொருளாளர் பரமசிவம், வட்டப்பிரதிநிதிகள் நல்லதம்பி, ஆதிநாராயணன், தமிழரசன், ஜோசப், கருப்பசாமி, முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா சரவணன், கவுன்சிலர் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், மற்றும் மணி, அல்பட், முன்னாள் அறங்காவலர் அறிவழகன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News