பொதுப்பணித்துறை சார்பில் 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் எ.வ.வேலு
- கடலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிதாக 4 சுற்றுலா மாளிகை கட்டப்படும்.
- ஏற்காடு உள்பட 3 இடங்களில் புதிதாக 3 ஆய்வு மாளிகைகள் கட்டப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று பேசியதாவது:
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் பொதுப்பணித் துறை சார்பில் 7 புதிய அறிவிப்புகளை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ஓசூரில் புதியதாக 4 சுற்றுலா மாளிகைகள் ரூபாய் 21.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
கடலூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 6 கோடி மதிப்பீட்டிலும், காஞ்சிபுரத்தில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டிலும், திருவள்ளூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 3 கோடி மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை ரூபாய் 9.90 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படும்.
கல்வராயன் மலை, ஏற்காடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் புதியதாக 3 ஆய்வு மாளிகைகள் ரூபாய் 9.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் புதியதாக 1 ஆய்வு மாளிகை ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டிலும், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் புதியதாக 1 ஆய்வு மாளிகை ரூபாய் 5 கோடி மதிப்பீட்டிலும், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் புதியதாக 1 ஆய்வு மாளிகை ரூபாய் 2 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்படும் என தெரிவித்தார்.