உள்ளூர் செய்திகள்

புளியமரம்  வேரோடு சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

திண்டிவனத்தில் பலத்த காற்று புளியமரம் விழுந்து மினி லாரி- மின் கம்பம் சேதம்: கவுன்சிலரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

Published On 2023-06-09 07:09 GMT   |   Update On 2023-06-09 07:09 GMT
  • திண்டிவனத்தில் பலத்த சூறை காற்று வீசியது.
  • விபத்தில் அங்கு இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்நேற்று இரவு பலத்த காற்று வீசியது. திண்டிவனம் கிடங்கல் - 1 பகுதியில் பல ஆண்டுகளாகஅரசுக்கு சொந்தமான பட்டுப்போன புளிய மரம் உள்ளது.இந்த புளிய மரத்தை அகற்றக்கோரி பல மாதங்களாக அந்த பகுதி பொதுமக்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவலகம் மற்றும் 29-வது வார்டு கவுன்சிலர் அரும்பு குணசேகரனிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

ேநற்று திண்டிவனத்தில் பலத்த சூறை காற்று வீசியபோது கிடங்கல் - 1 ல் இருந்த பட்டுப்போன புளியமரம் திடீரென சாய்ந்து விழுந்தது. அந்த மரம் அருகில் உள்ளமின் கம்பத்தின் மீதும் அருகே இருந்த பாலகுரு என்பவருக்கு சொந்தமானமினி லாரி, இருசக்கர வாகனம் ஆகியவை மேல் விழுந்து வாகனங்கள் சேதம் அடைந்தது.மேலும் மின்கம்பம் மீது சாய்ந்ததால் அருகே இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். 

இந்த விபத்தில் அங்கு இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் 29 -வது வார்டு கவுன்சிலர் அரும்பு குணசேகரனி டம்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த வருவாய் துறை மற்றும் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News