உள்ளூர் செய்திகள்

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமியர் இந்து கோவில், கிறிஸ்தவ ஆலயத்தில் இனிப்புகள் வழங்கிய காட்சி.

மிலாது நபி பெரு விழாவை முன்னிட்டு சுவிட் வழங்கிய இஸ்லாமியர்

Published On 2023-09-28 09:45 GMT   |   Update On 2023-09-28 09:45 GMT
  • நாகையில் உள்ள புதேவாலயம், கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுவிட் வழங்கி கொண்டாடினார்.
  • மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மீலாதுநபி பெறுவிழாவாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி நாகூர் நாயகன் நேசபாசறை என்ற அமைப்பை சேர்ந்த ஹாஜா சம்சுதீன் சாகிப் என்ற இஸ்லாமியர் மீலாது நபியை மத நல்லிணக்க விழாவாக கொண்டாடும் வகையில் நாகப்பட்டினம் கடற்கரை சாலையில் உள்ள புனித லூர்து அன்னை தேவாலயம், புகழ்பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம், பாப்பாகோவில் ஹாஜா சேக் அலாவுதீன் வலியுல்லா தர்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்கு வரும் பக்தர்களுக்கு சுவிட் கேக் வழங்கி கொண்டாடினார்.

மீலாது நபி பெருவிழாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமியர் ஒருவர் கேக் வழங்கி கொண்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News