உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1454 கன அடியாக சரிவு
- கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.79 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 69.84 டி. எம்.சி. ஆகவும் உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருவதால், அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,454 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று அணைக்கு வரும் நீரின் அளவு 1,466 கன அடியாக இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 1,454 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 103.79 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 69.84 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.