உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தேர் திருவிழா

Published On 2023-06-26 09:31 GMT   |   Update On 2023-06-26 09:31 GMT
  • தேர் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • சிறப்பு கூட்டு பாடற்பலியினை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் நடத்தினார்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் - ஊட்டி ரோட்டில் புனித அந்தோணியார் ஆலயம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலய தேர் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஆலயத்தில் தினந்தோறும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறப்பு கூட்டு பாடற்பலியினை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் நடத்தினார்.

தேர்த்திருவிழா சிறப்பு திருப்பலியை அருட்தந்தை.விக்டர் பால்ராஜ் நிறைவேற்றினர். பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைத்து தீர்த்தம் தெளித்து அர்ச்சிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து தேர் பவனி ஆலயத்திலிருந்து புறப்பட்டு பஸ் நிலையம், அண்ணா மார்கெட், அண்ணாஜி ராவ் ரோடு, ஊட்டி ரோடு வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.அதைத்தொடர்ந்து நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஹென்றி லாரன்ஸ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர். 

Tags:    

Similar News