உள்ளூர் செய்திகள்

கடத்தூர் பஸ் நிலைய பகுதியில் ஆதரவின்றி கிடக்கும் முதியவர்கள், மன நோயாளிகளை படத்தில் காணலாம்.

கடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் ஆதரவின்றி சுற்றி திரியும் மன நோயாளிகள்

Published On 2023-10-08 15:23 IST   |   Update On 2023-10-08 15:23:00 IST
  • மன நோயாளிகளின் நடமாட்டம் அதிகரித்து கொண்டு செல்கிறது.
  • ஆதரவின்றி அழுக்கு ஆடையுடன் சுற்றி திரிகிறார்கள்.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் சமீப காலமாக ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மன நோயாளிகளின் நடமாட்டம் அதிகரித்து கொண்டு செல்கிறது.

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மனநோயாளிகளை ஈவு இரக்க மில்லாமல் அவர்களது உறவினர்கள் வாகனத்தில் அழைத்து வந்து தருமபுரி மாவட்ட நெடுஞ்சாலை பகுதிகளில் இறக்கி விட்டு செல்கிறார்கள்.

பின்னர் அவர்கள் கால் போன போக்கில் நடந்து பஸ் ஸ்டேன்ட் பகுதிகளில் அடைக்கலமாகி ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு ஆதரவின்றி அழுக்கு ஆடையுடன் சுற்றி திருகிறார்கள்.

இதேபோன்று குழந்தை களை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய முதியவர்களும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் வேதனையான நிகழ்வுகளும் நடக்கின்றன.

இது போன்ற சாலை ஓரங்களில் ஆதரவு இல்லாமல் சுற்றித் திரியும் மன நோயாளிகள் மற்றும் முதியவர்கள் மழை வெயில் மற்றும் கடும் குளிரில் உணவின்றி, மருத்துவ வாய்ப்பின்றி, உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News