உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து

Published On 2022-07-01 13:46 IST   |   Update On 2022-07-01 13:46:00 IST
  • தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • அடுத்த 5 ஆண்டுகளில், இத்திட்டத்தில் ரூ. 25,600 கோடி முதலீடு செய்திடவும், 1500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று தலைமை செயலகத்தில், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், தமிழ்நாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு செமிகண்டக்டர் உயர் தொழில் நுட்பப் பூங்காவை அமைப்பதற்காக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில், இத்திட்டத்தில் ரூ. 25,600 கோடி முதலீடு செய்திடவும், 1500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News