உள்ளூர் செய்திகள்

தி.மு.க. சார்பில் ஆலோசனைக்கூட்டம்

Published On 2023-09-23 10:28 GMT   |   Update On 2023-09-23 10:28 GMT
  • ஒசூரில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், ஓசூரில் நேற்று மாலை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

ஓசூர்- தளி சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில்:-

வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கிருஷ்ண கிரி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளரும், விளை யாட்டு துறை அமைச்சரு மான உதயநிதி ஸ்டாலி னுக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். இதில். கட்சி நிர்வாகிகள், மாவட்ட, மாநகர ஒன்றிய நிர்வாகி கள், அணிகளின் அமைப்பா ளர்கள், துணை அமைப்பா ளர்கள், கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் வரவேற்பு ஏற்பாடு கள் குறித்தும் விரிவாக பேசினார்.

மேலும் இதில் துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட, மாநகர, நிர்வாகி கள் பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Similar News