உள்ளூர் செய்திகள்

 மத்தூரில் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஹரிணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு பூங்கொத்து கொடுத்து நினைவு பரிசு வழங்கிய காட்சி.

மத்தூர் ெபண்ணை கலெக்டர் நேரில் சந்தித்து வாழ்த்து

Published On 2023-05-26 15:12 IST   |   Update On 2023-05-26 15:12:00 IST
  • 12-ம் வகுப்பு வரை மத்தூர் கலைமகள் கலாலய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
  • ஹரிணியை கிருஷ்ணகிரி மாவ ட்ட கலெக்டர் சரயு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டினார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கருங்காலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரவி. இவரது மனைவி கோமதி அரசுப் பள்ளி ஆசிரியை இந்த தம்பதியிரின் மகள் ஹரிணி (26). இவர் எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை மத்தூர் கலைமகள் கலாலய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்து பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்துள்ளார்.

இதை தொடர்ந்து கோயமுத்தூரில் அரசு வேளாண்மை கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ் அகாடாயில் பயின்று அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ் தேர்வில் 289 இடத்தில் வெற்றி பெற்று இமாலாய சாதனை படைத்து கிருஷ்ணகிரி மாவட்ட த்திற்கும், மத்தூர் ஒன்றியத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஹரிணியை கிருஷ்ணகிரி மாவட்டாட்சித் தலைவர் சரயு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று பாராட்டி தனது மகள் ஐ ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என ஊக்கமும் ஆக்கமும் அளித்த பெற்றோர்களையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மகேஸ்வரி, போச்சம்பள்ளி வட்டாட்சியர் தேன்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்குமார், துரைசாமி, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News