உள்ளூர் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
மத்தூரில் காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
- மத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் மருத்துவமுகாம் நடந்தது.
- மருத்துவர் கார்த்திகேயன் பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையம் சார்பில் சேலம் சரக டி.ஐ ஜி. ராஜேஸ்வரி உததரவின் பேரில், மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அறிவுறுத்தலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையில் மத்தூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தோல், தொண்டை, உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனை முகாம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் மருத்துவர் கார்த்திகேயன் பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினார்.
இம்முகாமில் வட்டார கல்வி அலுவலர்கள் லோகநாயகி, நாசர், பள்ளியின் தலைமையாசியை ஆரோக்கியமேரி, ஆசியரியர் திருமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.