உள்ளூர் செய்திகள்

கோப்பை வென்ற மயிலாடுதுறை அணி.

மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் மயிலாடுதுறை அணி முதலிடம்

Published On 2023-07-31 09:58 GMT   |   Update On 2023-07-31 09:58 GMT
  • கடந்த 28-ந் தேதி முதல் 3 நாட்கள் போட்டிகள் நடைபெற்றது.
  • முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் கொடுக்கப்பட்டது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான 9-வது ஆடவர் கால்பந்தாட்ட போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.

சக்தி நினைவு கால்பந்து கழகம் மற்றும் மயிலை கால்பந்து கழகம் இணைந்து நடத்திய போட்டியில் மயிலாடுதுறை சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை, சேலம் காரைக்கால் மற்றும் கேரளாவில் இருந்து ஒரு அணி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

கடந்த 28ஆம் தேதி முதல் 3 தினங்கள் நடைபெற்ற போட்டியில் இறுதிப்போட்டிக்கு மயிலாடுதுறை மயிலை கால்பந்து கழக அணியும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நேற்று பரபரப்பாக நடைபெற்றது. இதில் மயிலை கால்பந்து கழகம் 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முதலிடம் பிடித்த மயிலாடுதுறை அணிக்கு வெற்றிகோப்பை 30 ஆயிரம் ரொக்க தொகையும், 2ம் இடம் பெற்ற திருச்சி செயின்ட்ஜோசப் அணிக்கு வெற்றிகோப்பை மற்றும் 25 ஆயிரம் ரொக்கதொகை வழங்கப்பட்டன.

மேலும் அரையிறுதி போட்டியில் விளையாடி 3ம் இடம்பிடித்த காரைக்கால் அணி, 4ம் இடம் பிடித்த சென்னை சிடானி எஃப்சி அணிக்கு கோப்பை களும் ரொக்கபரிசும் வழங்கப்பட்டன.

இதில் அனைவரையும் பாராட்டி தமிழ்ச் சங்கத் தலைவர் பவுல்ராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

Tags:    

Similar News