உள்ளூர் செய்திகள்

ராஜன்தோட்டத்தில் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் கட்டுமான பணிகளை கலெக்டர் லலிதா முன்னிலையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு செய்தார்.

பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் - நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

Published On 2022-06-11 09:51 GMT   |   Update On 2022-06-11 09:51 GMT
  • நகர்புற வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தததோடு பணிகளை விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டேன்.
  • சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குழநீர் மேல் நீர்தெக்க தொட்டிகள் மற்றும் அலுவலக தொடர்பான பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர்லலிதா முன்னிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர்பொன்னையா பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

சீர்காழி நகராட்சியில் நகர்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் உட்புற நோயாளிகளுடன் தங்குவோர் கட்டிடம் கட்டிமுடிக்கப் பெற்றுள்ளதையும், வார்டு எண். 4 ஈசான்ய தெருவில் கசடு கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் ரூ.260 லட்சத்தில் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள கட்டிடத்தினையும், வார்டு எண். 4 ஈசான்ய தெருவில் எரிவாயு தகன மேடையும், மேலும் நகராட்சி உரகிடங்கில் ரூ.147.20 லட்சம் மதிப்பீட்டில் உயிரிய செயலாக்கு முறை அமைக்கும் பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மை குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தினையும், சீர்காழி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள குழநீர் மேல் நீர்தெக்க தொட்டிகள் மற்றும் அலுவலக தொடர்பான பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.

அதனைதொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட மணக்குடியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமையவுள்ள பஸ் நிலைய இடத்தினையும், தருமபுரம் சாலை ராஜன்தோட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.2.00 கோடி செலவில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தேன்.

முன்னதாக மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு சேய்தேன். நகர்புற வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தததோடு பணிகளை விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்திரவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இவ்ஆய்வின்போது ராஜகுமார் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர்செல்வராஜ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன், சீர்காழி நகராட்சி ஆணையர்ராஜகோபாலன், நகராட்சி மண்டல செய ற்பொறியாளர்பார்த்திபன், மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர்சம்பத், மயிலாடுதுறை நகராட்சி பொறியாளர்சனல்குமார் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News