உள்ளூர் செய்திகள்

கலெக்டர் லலிதா ேதசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தேசியக் கொடி ஏற்றி மரியாதை- நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Update: 2022-08-15 10:02 GMT
  • விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
  • 51 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், 96 பேருக்கு பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறை:

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், சாய் விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். விழாவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 51 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், 96 பேருக்கு பாராட்டு சான்றிதழையும் கலெக்டர் லலிதா வழங்கினார். இதில் எஸ்.பி. நிஷா மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News