மத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜையை அ.தி,மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் தொடங்கி வைத்த போது எடுத்தபடம். அருகில் எம்.ஏல்.ஏ. தமிழ்செல்வம் உள்பட பலர் உள்ளனர்.
மத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.18.80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை
- மத்தூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.18 லட்சத்து 80 ஆயிரம் மதிபீட்டில் பூமி பூஜை நடைபெற்றது.
- அ.தி.மு.க. கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடக்கி வைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சத்து 80 ஆயிரம் மதிபீட்டில் பூமி பூஜை நடைபெற்றது.
இப்பூஜைக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி (வடக்கு) தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட அ.தி.மு.க. கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தேவராசன் (தெற்கு ) ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி (வ.ஊ), முருகன் (கி.ஊ), வட்டார கல்வி அலுவலர்கள் லோகநாயகி, நாசர், பள்ளியின் தலைமையாசிரியை ஆரோக்கியமேரி, மாவட்ட சிறுபாண்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல் ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இந்தியாஸ் ஷாஜஹான், ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் பழனி, மாவட்ட எம்.ஜி.ஆர் .மன்றத் துணைத் தலைவர் வினாயகமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி அக்ரி சீனிவாசன், செயலாளர் முனுசாமி, இளைஞர் பாசறை பாண்டியன், தகவல் தொழில் நுட்பபிரிபு பூபதி, திருமால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மத்தூர் அரசு பயணியர் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் கட்சியில் சிறு சிறு சலசலப்பின்றியும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கூறியும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை கிளை கழக நிர்வாகிகளை கூட்டி கூட்டம் நடத்த வேண்டும் எனவும், யாரேனும் இறந்தால் இரங்கல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும், அத்துடன் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளின் குறைகளை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.