உள்ளூர் செய்திகள்
அண்ணனை விறகு கட்டையால் தாக்கிய மேஸ்திரி கைது
- இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசை தம்பி பெருமாள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு விறகு கட்டையால் தாக்கினாராம்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெருமாளை கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கதவணி கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 45). கூலித்தொழிலாளி.
இந்த நிலையில் திருநாவுக்கரசுவுக்கும், அவருடைய தம்பி மேஸ்திரியான பெருமாள் (35) என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருநாவுக்கரசை தம்பி பெருமாள் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு விறகு கட்டையால் தாக்கினாராம்.
இதனை தடுக்க வந்த தாய் ராஜேஸ்வரிக்கும் காயம் ஏற்பட்டது. திருநாவுக்கரசு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பெருமாளை கைது செய்தனர்.