உள்ளூர் செய்திகள்
மதுபோதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த மேஸ்திரி சாவு
- இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
- சாக்கடை கால்வாயை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள காசிக்காரபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மதியன் (வயது40). மேஸ்திரி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது சாப்பிட்ட மதியன் ஓசூர் அருகே உள்ள மீனாட்சி லேஅவுட்டில் சாக்கடை கால்வாயை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.