உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்.

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தர்ணா - குடிநீர் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

Published On 2022-12-28 09:15 GMT   |   Update On 2022-12-28 09:15 GMT
  • நெல்லை மாநகர பகுதிகளுக்கு அரியநாயகி புரத்தில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்

நெல்லை:

நெல்லை மாநகர பகுதிகளுக்கு அரியநாயகி புரத்தில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

தர்ணா

இதையொட்டி குடிநீர் கட்டணம் 5 சதவீதம் உயர்த்து வதற்கான தீர்மானம் இன்று மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் தலைமையில் நிர்வாகிகள் பதாதைகளுடன் மாநக ராட்சி கூட்டம் நடைபெற்ற ராஜாஜி மண்டபத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.அப்போது கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது கவுன்சி லர்கள், பொதுமக்கள் கோரிக்கைகளை ஏற்று இன்று நிறைவேற்றப்பட இருந்த குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News