உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருேக மருங்கூர் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வி.எம்.கேஷ்யூஸ் அதிபர் வீரவிஸ்வாமித்திரன், அவரது மனைவி சண்முகபிரியா, மகள் ருத்ரா ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

மருங்கூர் ஊத்துகாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-06-13 15:35 IST   |   Update On 2022-06-13 15:35:00 IST
  • மருங்கூர் ஊத்துகாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊத்துகாட்டு மாரி அம்மன் கோவில்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டிஅருகே மருங்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊத்துகாட்டு மாரி அம்மன் கோவில்.இங்குஏராளமான பொருள் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதில் இதனைமுன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான யாக சாலை யில்யாகசாலை வேள்விபூஜைகள் கடந்த 12ஆம் தேதி முதல் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வந்தது. இன்று காலை 6மணிக்கு 3வதுகால யாகசாலை வேள்விபூஜைகள் நடைபெற்று கலச நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலவர் கருவறை விமான கலசம் மீதுகலச நீர் ஊற்றி பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம்நடந்தது.

தொடர்ந்து பரிவாரதெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மகா அபிஷேகம், மகாதீபாராதனை ஆகியவைநடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஓம் சக்தி, ஓம்சக்தி என விண்ணதிர முழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் நந்த கோபால கிருஷ்ணன், வி.எம். கேஷியூஸ் அதிபர்விசுவாமித்திரன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்,கிராம இளைஞர்கள்கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்தனர்.

Tags:    

Similar News