உள்ளூர் செய்திகள்

இரும்புக்கடை அதிபர் மர்மசாவு

Published On 2023-09-02 09:20 GMT   |   Update On 2023-09-02 09:20 GMT
  • மருமகள் மீது சந்தேகம் இருப்பதாக புகார்
  • அன்னூர் போலீசார் தீவிர விசாரணை

கோவை,

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் 38 வயது வாலிபர். இவர் ேகாவையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

வாலிபர் அன்னூர் அருகே இரும்புக்கடை நடத்தி வந்தார். இங்கேயே சொந்த வீடு கட்டி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

திடீரென வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கம்பத்தில் வசிக்கும் வாலிபரின் பெற்றோருக்கு அவரது மனைவி செல்போனில் பேசி உள்ளார். உங்கள் மகனுக்கு உடல் நலம் சரியில்லை எனவும், ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பின்னர் மகன் இறந்து விட்டதாக அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் செல்போனில் பேசி தகவல் தெரிவித்துள்ளார்.

திடீரென வாலிபர் இறந்ததால் அவரது இறப்பில் சந் தேகம் இருப்பதாக கூறி வாலிபரின் தந்தை தற்போது அன்னூர் போலீஸ்நிலை யத்தில் புகார் செய்துள்ளார்.

புகாரில் அவர் கூறியிருப்பதவாது:-

எனது மகன் இறந்ததாக தெரிவித்ததும் வயதான எங்களால் கோவைக்கு வர முடியாது. உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டோம். அதன்படி எனது மகன் உடலை எங்கள் ஊருக்கு கொண்டு வந்தனர். அப்போது எனது மருமகளும் உடன் வந்தார். அந்தசமயம் மருமகளிடம் நாங்கள் எதுவும் கேட்கவில்லை. தொடர்ந்து மகனின் உடலை அடக்கம் செய்து விட்டோம்.

மகன் இறந்து 30-வது நாள் நிகழ்ச்சிக்கு மருமகளை வரும்படி கூறி இருந்தோம். அவரும் வந்தார். ஆனால் அவருடன் ஓமியோபதி டாக்டர் வருவர் வந்திருந்தார். அந்த டாக்டருக்கும், எனது மருமகளுக்கும் உள்ள பழக்கத்தில் தான் குடும்பத்தில் பிரச்சினை இருந்ததாக அக்கம்பக்கத்தினர் மூலம் நான் அறிந்திருந்தேன்.

எனது மருமகள், அந்த டாக்டரை உடன் அழைத்து வந்திருந்ததால் எனது மகனின் மரணத்தில் எனக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் 2 பேரும் சேர்ந்து எனது மகனை எதுவும் செய்து இருப்பார்களோ என சந்தேகிக்கிக்க தோன்றுகிறது. இதனால் எனது மகன் உடலை சட்டப்படி தோண்டி எடுத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  

Tags:    

Similar News