உள்ளூர் செய்திகள்
காந்தி ஜெயந்தியையொட்டி மராத்தான் போட்டி
- அரூர் பேரூராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி மராத்தான் போட்டி நடைபெற்றது.
- மாணவிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 18 வார்டு களிலும் தூய்மையே சேவை தலைப்பில் தூய்மை பணி நடைபெற்றது.
இது குறித்த விழிப்பு ணர்வுக்காக மராத்தான் போட்டி நடைபெற்றது. இதனை அரூர் பேரூராட்சி தலைவர் இந்திராணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் சூர்யா, தனபால், செயல் அலுவலர் விஜயசங்கர் மற்றும் நியமன குழு உறுப்பினர் முல்லை ரவி, வார்டு உறுப்பினர்கள், தன்னார்வ லர்கள், நாட்டு நலப்பணி மாணவிகள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
பேரூராட்சி அலுவல கத்தில் பேரணி தொடங்கி கடைவீதி, பஸ் நிலையம், வர்ண தீர்த்தம், பைபாஸ் சாலை மற்றும் முக்கிய வழியாக சென்றது.