உள்ளூர் செய்திகள்

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அஞ்சலி செலுத்திய காட்சி.

மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு தினம்: தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை

Published On 2022-07-23 09:30 GMT   |   Update On 2022-07-23 09:30 GMT
  • மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.
  • அஞ்சலி செலுத்த வந்த கட்சியினர் அரசு விருந்தினர் மாளிகை அருகே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்து சென்று தாமிரபரணி ஆற்றில் மரியாதை செலுத்தினர்.

நெல்லை:

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவத்தின் 23- வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் தாமிரபரணி ஆற்றில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் நீலகிருஷ்ணமுரளி யாதவ், மாவட்ட செயலாளர் குட்டி என்ற வெங்கடாசலபதி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட செயலாளர் லெட்சுமணன் தலைமையில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் காசி விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் உடையார், மாநகர தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் பொதுச்செயலாளர் பால முருகன் நிர்வாகிகள் முத்து கருப்பன், பிரேம்குமார், பால்ராஜ், பச்சை தங்கவேலு. சிவாஜி உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நிர்வாகிகள் நெல்லையப்பன், துரைபாண்டியன் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர். தமிழர் விடுதலை களம் சார்பில் முத்துகுமார், தமிழர் உரிமை மீட்பு களத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையில் நிர்வாகிகள் மரியாதை ெசலுத்தினர். அஞ்சலி செலுத்த வந்த கட்சியினர் வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நடந்து சென்று தாமிரபரணி ஆற்றில் மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News