உள்ளூர் செய்திகள்

மணியம்பாடி கோவிலில் பக்தர்கள் நேர்ந்து விட்ட மாடுகளை படத்தில் காணலாம்.

மணியம்பாடி கோவிலில் பக்தர்தர்கள் நேர்ந்துவிட்ட மாடு, கன்றுகள் ஏலம்

Published On 2023-10-03 15:12 IST   |   Update On 2023-10-03 15:12:00 IST
  • மணியம்பாடி கோவிலில் பக்தர்கள் நேர்ந்து விட்ட மாடு, கன்றுகள் ஏலம் விடப்பட்டன.
  • சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

தருமபுரி மாவட்டம் மணியம்பாடி ஊராட்சி யில் வெங்கட்டரமண சுவாமி கோவில் உள்ளது. இந்து அறநிலை துறை கட்டுபாட்டில் உள்ள இந்த கோவிலில் சனி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் வேண்டுதல் நிறைவேற்ற பக்தர்கள் மாடுகளை காணிக்கையாக கொண்டு வந்து விட்டு வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த புரட்டாசி மாதம் இரண்டு சனிக்கி ழமைகளில் ஒரு மாடு உள்பட 15 கன்றுகள் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்டது. இதனை ஆயிரத்துக்கு ஏலம் விட்டனர்.

பக்தர்கள் நேர்த்திகடனாக விடும் மாடுகளை கோசாலைகள் அமைத்து பாதுகாத்து வளர்க்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Similar News