உள்ளூர் செய்திகள்

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - திமுக எம்பி கனிமொழி பேச்சு

Published On 2023-07-23 17:34 IST   |   Update On 2023-07-23 17:59:00 IST
  • மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பா.ஜ.க. அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகிறது.
  • தி.மு.க. மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை:

மணிப்பூர் மாநிலத்தில் சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டனர். மனிதாபிமானமற்ற இந்த கொடுமையான சம்பவம் அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத பா.ஜனதா அரசை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசுகையில், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தார்.

Tags:    

Similar News