உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி, கடசோலை அரசு பள்ளியில் மேலாண்மை குழுக்கூட்டம்

Published On 2023-07-02 14:24 IST   |   Update On 2023-07-02 14:24:00 IST
  • உறுப்பினர்களின் வருகைப் பதிவு, மொபைல் ஆப்பில் பதிவு செய்யபட்டது.
  • பள்ளிக்கு இந்த ஆண்டில் செயல்படுத்த வேண்டிய குறுகிய- நீண்ட கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அரவேணு.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியம் கடசோலை அரசு நடுநிலைப் பள்ளியில் நடப்பாண்டின் முதல் மேலாண்மைக் குழு கூட்டம், தலைவி கலாராணி தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்துக்கு கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினருமான ராம்குமார் முன்னிலை வகித்தார். கடசோலை பள்ளியின் புதிய தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் வரவேற்றார். அதன்பிறகு உறுப்பினர்களின் வருகைப் பதிவு, மொபைல் ஆப்பில் பதிவு செய்யபட்டது.

இதனை தொடர்ந்து பள்ளிக்கு இந்த ஆண்டில் செயல்படுத்த வேண்டிய குறுகிய- நீண்ட கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதன.

கடசோலை பள்ளி மேலாண்மை குழுக்கூட்டத்தில் குழந்தைகள் இடைநிற்றல்,மாணவர் கற்றல் திறன் மேம்பாடு, வாசிப்புத் திறன் அபிவிருத்தி, மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி, தங்கு தடையற்ற குடிநீர், இலக்கிய மன்றம் நடத்துதல், ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு, பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேலி அமைத்தல், இல்லம் தேடி கல்வி கண்காணிப்பு, முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம், தற்காலிக ஆசிரியர் நியமனம் ஆகியவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் பாலசுப்ரமணி, ரெனிதா பிரபாவதி, ராஜேந்திரன், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மேரி ஜெனிபர், ஜீவசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News