திருமணமான பெண்ணை காதலிக்க வலியுறுத்தி அரிவளால் வெட்டிய வாலிபர்: போலீசார் வலைவீச்சு
- திருமணமான பெண்ணை காதலிக்க வலியுறுத்தி அரிவளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்
- பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகேயுள்ள இராணிமூக்கனூர் அண்ணாநகரை சேர்ந்த வர் பன்னீர்.இவரது மனைவி நந்தினி (வயது25). இருவக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் இவருக்கும் ,கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019 -ம் ஆண்டு பிரிந்து வந்து சொந்த ஊரான மொட்டாங்குறிச்சியில் தங்கி இருந்தார். அப்போது மீனன ்கொட்டாய் கிரா மத்தை சேர்ந்த கணேசன் மகன் சண்முகம்(31) என்பவர் அவருடன் நன்கு பேசி பழக்கமாகி உள்ளார்.
மேலும் இவர் நந்தினி கணவரிடமிருந்து விவகாரத்து பெறுவதற்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கணவர் பன்னீர் வந்து சமாதானம் செய்து நந்தினியை அழைத்து சென்று குடும்பம் நடத்தி வந்தார். இதில் ஆத்திரம் அடைந்த சண்முகம் நந்தினிக்கு தொடர்ந்து காதலிப்பதாக சொல்லி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த சண்முகம் மீண்டும் தொடர்ந்து நந்தினிக்கு தொல்லை அளித்து வந்த நிலையில் சம்பவத்தன்று ரோட்டில் நடந்து சென்ற நந்தினியை மோட்டர் சைக்கிள் பின் தொடர்ந்து வந்து தனது மோட்டர் சைக்கிளில் அமரச் சொல்லி மிரட்டி உள்ளார். அவர் மறுக்கவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்டியுள்ளார்.
இதில் நந்தினிக்கு இடது பக்கத்து தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டனர். இதனை கண்டதும் அங்கேயிருந்து சண்முகம் தப்பி யோடினார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நந்தினியை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது குறித்து நந்தினி அளித்த புகாரின் மொரப்பூர் போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து் தலைமறைவாக உள்ள சண்முகத்தை தேடி வருகின்றனர்.