மதுவில் ஊமத்தங்காய் கலந்து விற்றவர் கைது
- பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுவில் ஊமத்தங்காய் கலந்து விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- 140 மதுப்பாட்டில்கள் பறிமுதல்.
பொம்மிடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் மாரப்பன் மற்றும் போலீசார் மது விலக்கு தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பொம்மிடி ரோட்டில் மாரியம்மன் கோவில் அருகே மோட்டர் சைக்கிளல் வத்த நபர் ஒருவர் திடீரென்று போலீசாரை கண்டதும் தப்பி ஒட முயன்றார்.
அவரை வளைத்து பிடித்து அவரது மோட்டர் சைக்கிளில் இருந்த சாக்குபையை எடுத்து சோதனையிட்டபோது அதில் 140 மது பாட்டில்கள் இருந்தன. அதில் சில மதுப்பாட்டில்கள் திறந்து இருந்தன. அதனை எடுத்து சோதனை செய்தபோது அதிக போதைக்காக ஊமத்தங்காயை அதில் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள நத்தமேடு கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் தருமன்(39) என்பரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 140 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.