தமிழ்நாடு செய்திகள்

கொடியேற்ற விடாமல் தடுப்பதா?- மக்கள் நீதி மய்யம் கண்டனம்

Published On 2022-12-08 16:05 IST   |   Update On 2022-12-08 16:11:00 IST
  • மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் சிவ இளங்கோ திண்டுக்கல் பொன்னகரம் பகுதியில் கொடியேற்ற முயலும்போது காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளார். 
  • திரும்ப மற்ற கட்சிகளின் கொடி ஏற்றப்பட்டுவிட்டபின், மக்கள் நீதி மய்யம் கட்சி கொடி மட்டும் ஏற்ற அனுமதியில்லை என்று தடுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் சிவ இளங்கோ திண்டுக்கல் பொன்னகரம் பகுதியில் கொடியேற்ற முயலும்போது காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளார்.  அந்தக்கொடி ஏற்கனவே அந்த இடத்தில் ஏற்றப்பட்டு, அங்கே கால்வாய் அமைக்கும் பணியால் பிடுங்கப்பட்டது.

திரும்ப மற்ற கட்சிகளின் கொடி ஏற்றப்பட்டுவிட்டபின், மக்கள் நீதி மய்யம் கட்சி கொடி மட்டும் ஏற்ற அனுமதியில்லை என்று தடுக்கப்பட்டுள்ளது. ஏனைய கொடிகள் இருக்கும்போது எங்கள் கொடியை மட்டும் தடுப்பதேன், நாங்கள் எங்கள் கொடியை ஏற்றியே தீருவோம் என்று கட்சியினர் போராடிய பின்பு அனுமதி அளிக்கப்பட்டு, பின் கொடி ஏற்றப்பட்டது. மற்ற கொடிகள் பறக்கும் இடத்தில்கூட எங்கள் கொடியை ஏற்ற தடை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News