புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- விமானத்தில் உள்ள கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு தரங்க சாலையில் அமைந்துள்ள மதுரை வீரன் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கு ஜெயராஜ் கோகுல் சுரேஷ் பாஸ்கர் ராஜேந்தர் ஆகியோர் விழா குழுவினர்களாக தலைமை ஏற்றனர். இதில் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. சிவாச்சாரியார் சோமசுந்தர் தலைமையில் சிவ ஆகம முறைப்படி மந்திரங்கள் ஓத கடம் புறப்பாடு கோயிலை வலம் வந்தது.
மேள தாளங்கள் முழங்க கருடன் வட்டமிட பக்தர்கள் ஓம்சக்தி ஓம்சக்தி என கோஷங்கள் எழுப்ப வானவேடிக்கையுடன் விமானத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள மதுரைவீரன், மகா மாரியம்மன் திருவுருவ சிலைக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.