உள்ளூர் செய்திகள்

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் உலக நன்மைக்காக மகா நவசண்டி யாகம்

Published On 2023-08-07 15:46 IST   |   Update On 2023-08-07 15:46:00 IST
  • வடுக பூஜை, கலச புறப்பாடு, ஸ்ரீ சக்கரம்,. கலசாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
  • விழாவில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவிலில் உலக நன்மைக்காக மகா நவசண்டி யாகம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், 28-வது ஆண்டு மகா நவசண்டி யாகம், கடந்த வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்கள் நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள், கணபதி ஹோமம், பூர்ணாஹுதி ஆகிய நிகழ்ச்சிகளுடன் தொடங்கி, அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம் மற்றும் மகாதீபாராதனையும், சனிக்கிழமை அன்று முதற்கால மகா நவசண்டியாகம், லட்சுமி ஹோமம், ருத்ர ஹோமம் மற்றும் இரவு இரண்டாம் கால மகா சண்டி யாகமும் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நாளான நேற்று, கலசபூஜை, ருத்ர ஹோமம், துர்கா ஹோமம் லட்சுமி ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பின்னர், மூன்றாம் கால மகா நவ சண்டி யாகம் நடைபெற்றது.

தொடர்ந்து, வடுக பூஜை, கலச புறப்பாடு, ஸ்ரீ சக்கரம்,. கலசாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. மேலும், விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News