தேர் திருவிழாவை முன்னிட்டு கோவிலில் கம்பம் நடப்பட்டுள்ள காட்சி.
பரமத்திவேலூரில் மகா மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா தொடக்கம்
- பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.
- கடந்த 19-ந் தேதி இரவு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. கடந்த 19-ந் தேதி இரவு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
காப்பு கட்டும் விழா
அதனை தொடர்ந்து செல்லாண்டி அம்மன், கொங்கலம்மன் கோவில்களி லும் காப்பு கட்டும் விழா நடைபெற்றது. நேற்று முதல் வருகிற 25-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, சிறப்பு அலங்கார மும் நடைபெறுகிறது.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
26-ந் தேதி இரவு மறுகாப்பு கட்டுதலும், கிராம சாந்தியும் நடைபெறுகிறது. 27-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை தினந்தோறும் கட்டளை தாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.
ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், பரிவட்டம் சூட்டுதலும் நடைபெறுகிறது.
4-ந் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. 5-ந் தேதி இரவு பொங்கல், மாவிளக்கு பூஜையும், 6-ந் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், 7-ந் தேதி மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் எட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.